Sunday, July 22, 2012


சிந்தனைகள்
· நண்பனே! முதலில் மனிதனாய் இரு. பிறகு நீ விரும்புவன அனைத்தும் உன்னைப் பின் தொடர்வதை நீ காண்பாய்.
· நம்மையே நாம் நம்பாதவரை நமக்குக் கடவுள் நம்பிக்கை ஏற்படாது. உண்மையில் அனைவருள்ளும் கடவுள் இருக்கிறார்.
· மக்களுக்குச் சேவை செய்பவன் உண்மையில் கடவுளுக்குச் சேவை செய்பவனாகிறான்.
· மக்கள் உன்னைப் புகழ்ந்தாலும் சரி, இகழ்ந்தாலும் சரி, கடவுள் உனக்கு அருள்புரியட்டும் அல்லது புரியாமல் போகட்டும்; உன் உடல் இன்றைக்கே வீழ்ந்து போகட்டும், நீ மட்டும் உண்மை என்னும் பாதையிலிருந்து அணுவளவேனும் பிறழ்ந்து செல்லாமல் இருப்பதில் கவனமாக இரு.
· மனிதன் எந்த அளவுக்கு உயர்ந்தவன் ஆகின்றானோ அந்த அளவுக்கு அவன் கடுமையான சோதனைகளையும் கடந்தாக வேண்டும்.
· உலகப் பெரியோர்கள் வாழ்க்கையை ஆராய்ந்துப் பார்த்தால் அவர்கள் ஞான ஒளியைப் பெறுவதற்கு, இன்பத்தை விடத் துன்பமே – செல்வத்தைவிட வறுமையே – புகழை விட இகழே அவர்களுக்குப் பெரிதும் உதவியாக இருப்பது தெரியவரும்.